Skip to main content

Posts

தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் இரா.வைத்திநாதன் ஆய்வு

தேனி, ஜூலை.17- தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று (17.7.2026) ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அவர்கள் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சி சுக்காங்கால்பட்டி கிராமத்தில் முல்லைப் பெரியாற்றிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இப்பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல ரூ. 1 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன், குடிநீர் குழாயின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து வேப்பம்பட்டி ஊராட்சியில், ரூ.3 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை அடுத்து அப்பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்தின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்தார். ...

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில்; காமராஜர் 124-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

தேனி, ஜூலை.17- தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், எளிமையின் சிகரம் மற்றும் கிங்மேக்கர் "கல்விக் கண் திறந்த கர்மவீரர்" எனப் போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜர், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் எண்ணற்ற பள்ளிகளை தொடங்கி, இலவச கல்வி மற்றும் மதிய உணவு திட்டம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தினார். அவரது கல்வி புரட்சியால் தமிழகம் கல்வியில் புதிய எழுச்சியை அடைந்தது. அவரது தன்னலமற்ற சேவை, எளிமை, நேர்மை மற்றும் மனிதநேயத்தை இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது பிறந்த நாள் கல்வி திருவிழாவாக தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இந்த பிறந்த நாள் விழா குறித்து உறவின்முறை பொதுச்செயலாளர் ஆனந்தவேல் கூறியதாவது, பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சமூக பொறுப்பு, உடல்நலம், மனிதநேயம் மற்றும் விளையாட்டு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் மினி மாரத்தான், மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள், மாபெரும் ரத...

தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள அறிவுசார் மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் ஆய்வு

தேனி, ஜூலை.15- தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அறிவுசார் மையத்தை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, அதே பகுதியில் செயல்பட்டு வரும் தோழி விடுதியையும் பார்வையிட்டு, அங்கு தங்கியுள்ள அரசு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளான சாலை வசதி, கூடுதல் தெருவிளக்குகள் அமைத்தல், பேருந்து நிறுத்தம் ஏற்படுத்துதல் மற்றும் கூடுதல் பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததுடன், பேரூராட்சி நிர்வாகம் மூலம் கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் மரு. இரா.வைத்திநாதன் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர்  மிதுன்சக்கரவர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஷ்ணுபிரியா, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் யோகஸ்ரீ உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். ............................

தேனி பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடம்: கலெக்டர் வைத்திநாதன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்

தேனி, ஜூலை.14- தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மாநில  கல்லூரி வளாகத்தில் இன்று (14.7.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்து. மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம். பூதிப்புரம் பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தில் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். இதன்பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை மையம், மருந்தக பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டதுடன், அங்கிருந்த பொதுமக்களிடம் சிகிச்சை வழங்...

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பொதுமக்களிடம் இருந்து 525 கோரிக்கை மனுக்கள்

தேனி, ஜூலை.13- தேனி மாவட்ட  கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (13.7.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 525 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 525 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.11,445/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், ரூ.9000/- மதிப்பிலான கம்மோடு வீல் சேர், ரூ.594/- மதிப்பிலான எல்போ ஊன்றுகோல், ரூ.15,750/- மதிப்பிலான சக்கர நாற்காலி என மொத்தம் ரூ.36,789/- மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) கவி...

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் உணவு கிட்டங்கிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் ஆய்வு

  தேனி, ஜூலை.11- தேனி மாவட்டத்தில் இன்று (18.7.2026) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் தேனி மண்டல உணவுப்பொருள் கிட்டங்கிகளை மாவட்ட கலெக்டர் மரு இரா.வைத்திநாதன் முன்னிலையில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் அவர்கள் தேனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உணவுப்பொருள் இருப்புக் கிட்டங்கியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்டப் பொருட்களை பார்வையிட்டதுடன் அதன் இருப்பு குறித்தப் பதிவேடுகளை ஆய்வு செய்து உணவுப்பொருட்களை இருப்பு வைக்காமல் அவ்வப்போது நியாய விலைக்கடை அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அரசு பராமரிப்பில் உள்ள மையங்களுக்கு அனுப்பி வைக்கவும் உணவுப்பொருட்களின் தரம் குறைவாக இருந்தால் அதை உடனடியாக மாற்றி தரம் உள்ள உணவுப்பொருட்கள் அனுப்புவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடந்து தேனி நுகர்பொருள் வாணிபக்கழக உணவுக்கிட்டங்கியில் ரூ4.71 கோடி மதிப்பீட்டில் தலா 10...

தேனி மாவட்ட மக்களின் கல்வி கனவான கேந்திர வித்யாலயா பள்ளிக்கு அனுமதி : தேனி மக்கள் நலச் சங்க செயலாளர் வி.ஆர்.ராஜன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

தேனி, ஜூலை.7- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற தேனி மாவட்ட DISHA கமிட்டி ஆய்வு கூட்டத்தில், தேனி மாவட்ட மக்களின் நீண்டகால கல்வி கோரிக்கையான கேந்திர வித்யாலயா பள்ளி தொடங்குவது குறித்து தேனி மாவட்ட DISHA கமிட்டி உறுப்பினர், தேனி மக்கள் நலச் சங்க செயலாளர், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.ஆர்.ராஜன் கேள்வி எழுப்பி வலியுறுத்தி பேசினார். அப்போது அவரது கேள்விக்கு பதிலளித்து பேசிய மாவட்ட கலெக்டர் வைத்திநாதன், தேனி மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி தொடங்குவதற்கான அனுமதி கிடைத்து விட்டடதாகவும். அல்லிநகரத்தில் உள்ள நகராட்சி பள்ளியில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார். தேனி மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோரிக்கை நிறைவேற முயற்சிகள் மேற்கொண்ட மதிப்பிற்குரிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்களுக்கும், மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த ந...

தேனி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணியாற்றும் பரப்புரையாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை தொகையை பெற்று தரக்கோரி கலெக்டரிடம் மனு

தேனி, ஜூலை.7- தேனி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணியாற்றும் பரப்புரையாளர்கள் மற்றும் ஓட்சா கூட்டமைப்பு மாவட்ட தலைவர் வனிதா, மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட பொருளாளர் பேச்சியம்மாள் தலைமையில் பரப்புரையாளர்கள் மற்றும் ஓட்சா கூட்டமைப்பினர் மாவட்ட கலெக்டர் வைத்திநாதனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பணியாற்று வரும் பரப்புரையாளர்கள் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறையின் கீழ் உள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் தற்போது பணியாற்றி வரும் அனிமேட்டர்கள் என அழைக்கப்படும் பரப்புரையாளர்களை நியமித்து பராமரித்து வரும் தொடர்புடைய ஏஜென்சிகள் இடைநீக்கம் செய்யாமல் தொடர்ந்து பணி வழங்கிட வேண்டும். அதுபோல ஒப்பந்ததாரர்கள் மாறினாலும் பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் பரப்புரையாளர்களை பணி நீக்கம் செய்யாமல் தொடர்ந்து பணி வழங்கிட மாவட்ட நிர்வாகம் ஆவணம் செய்ய வேண்டும். அதுபோல மற்றொரு மனுவில், தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் பரப்புரையாளர...

குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தேனி, ஜூலை.6- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (6.7.2026) குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெற உள்ளதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன். தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அவர்கள், குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆடிப்பெருந் திருவிழாவின்போது, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்துத் துறை வாரியாக எந்தெந்த வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலந்த ஆலோசனை மேற்கொண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் திருவிழா காலத்தில் திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு செல்லும் வழியினை தெளிவாக வழிகாட்டிப் பலகை (Arrow mark) மூலம் காண்பித்தில், கோயில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணித்தல், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்ய வழிவகை செய்திட வேண்டும். குச்சனூர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்த...

விநாயகர் சதுர்த்தி விழாவை தேனி மாவட்டம் முழுவதும் பக்தி உணர்வுடன் சிறப்பாக நடத்த வேண்டும் : இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு கூட்டத்தில் முடிவு

தேனி, ஜூலை.6- தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணியின் வார வழிபாடு கூட்டம் 5.7.2026 அன்று நடைபெற்றது. இந்த வார வழிபாட்டிற்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன: தீர்மானம் – 1: வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாகவும், பக்தி உணர்வுடனும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் – 2: தமிழக அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள், தமிழக ஆளுநரின் அறிக்கையை தவறாக புரிந்து கொண்டு அதற்கு எதிர்மறையான கருத்துக்களை தொடர்ந்து வெளியிடுவதை தவிர்த்து, தமிழக மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது. மேலும், தேவையற்ற மோதல் போக்கையும் எதிர்ம...